
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
86 வயதான மன்னர் சல்மான் பின் அப்துல்லா அஜீஸ், தனது மகன் மொஹமட் பின் சல்மான் பிரதமராக நியமித்துள்ளார்.
மேலும் இரண்டாவது மகன் இளவரசர் காலித்தை பாதுகாப்பு அமைச்சராகவும் மன்னர் நியமித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் வலுசக்தி அமைச்சராக மன்னர் சல்மானின் மற்றுமொரு மகன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சல்மானின் வயது முதிர்வு காரணமாக இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் தெரிவிக்கின்றன.