
கொழும்பு, செப்28
இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் விற்பனை செய்யப்படுகின்ற ஒரு லீற்றர் ஒடோ டீசலுக்கு 31 ரூபா 88 சதம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூட்டுதாபனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு லீற்றர் ஒடோ டீசல் 461 ரூபா 88 சதத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டாலும், ஒடோ டீசல் ஒரு லீற்றர் 430 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றது.
எனினும், ஏனைய எரிபொருள்களின் ஊடாக பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு இலாபம் கிடைப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் ரக பெட்ரோலின் ஊடாக 77 ரூபா 35 சதம் இலாபம் கிடைக்கின்றது.
அத்துடன், ஒரு லீற்றர் 95 ஒக்டேன் ரக பெட்ரோலின் ஊடாக 187 ரூபா 43 சதம் இலாபம் கிடைக்கின்றது.
ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் ஊடாக 48 ரூபா 30 சதம் இலாபம் கிடைக்கின்றது