நினை­வேந்­தலை ஏனைய தரப்­பி­னரே குழப்­பி­ய­டித்­தது! –சுகாஷ்

ஊட­கங்­க­ளில் வெளி­வந்­த­தைப் போன்று திலீ­ப­னின் நினை­வேந் ­தலை நாம் குழப்­ப­வே­யில்லை. வேலன் சுவா­மி­க­ளும், அடி­யாள்­களை வைத்து இயங்­கு­கின்ற முதல்­வர் மணி­வண்­ணன் தரப்­பி­ன­ரும், ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்­சி­யி­ன­ரும்­தான் குழப்­பி­னர் – என தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­ யின் ஊட­கப் பேச்­சா­ளர் கன­க­ரத்­தி­னம் சுகாஷ் தெரி­வித்­துள்­ளார்.
தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி ­யின் யாழ். அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஈ.பி.டி.பி மணி­வண்­ணன், அரச புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரின் இயக்­கத்­தில் இயங்­கு­கின்ற ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி மற்­றும் சில வேற்று நாடு­க­ளின் நிகழ்ச்சி நிரல்­களை மேற்­கொள்­ளும் தரப்­பி­ன­ரால் நினை­வேந்­தலை குழப்­பு­வ­தற்கு பல்­வே­று­பட்ட சதி நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

தமிழ்த் தேசிய அர­சி­ய­லைக் கடத்­து­கின்ற, தமி­ழர்­க­ளு­டைய அபி­லா­ஷை­களை முன்­வைக்­கின்ற ஓர் இட­மாக, தியாக தீபத்­தின் நினை­வேந்­த­லைப் பார்க்­கா­மல், தமிழ்த் தேசிய அர­சி­யலை நீக்­கம் செய்து, இந்­தி­யா­வுக்கு இருக்­கின்ற வர­லாற்­றுக் கட­மையை தட்­டிக் கழிக்­கின்ற, மறைக்­கின்ற ஒரு சதி­தான் இங்கு நடந்­து­கொண்டு இருக்­கி­றது.தியாக தீபத்­தின் நினை­வேந்­தல் இடத்­தில் அவ­ரது அபி­லா­ஷை­களை கதைப்­ப­து­தான் முக்­கிய கடமை. தியாக தீபத்­தின் அபி­லா­ஷை­க­ளை­யும் ஐந்து அம்­சக் கோரிக்­கை­க­ளை­யும் அவ்­வி­டத்­தில் பேசாது வெறு­மனே அழு­து­விட்­டுச் செல்­லு­மாறு கூறு­வது இந்­தி­யா­வைக் காப்­பாற்­று­கின்ற செயற்­பாடு. நினை­வேந்­தல்­க­ளில் அர­சி­யல் கதைக்­கக் கூடாது என்று கருதி இருந்­தால், மேதகு வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் மாவீ­ரர்­கள் தினங்­க­ளில் தேசிய சர்­வ­தேச முக்­கி­யத்­து­வம் வாய்ந்த, தமிழ் இனத்­துக்கு வழி­காட்­டிய மாவீ­ரர் நாள் உரையை ஆற்றி இருக்க மாட்­டார். உண்­மை­யில் என்ன நடந்­தது என்­பதை விளங்­கப்­ப­டுத்த வேண்­டிய கடப்­பாடு எமக்கு உள்­ளது.

மதத் தலை­வர்­கள், சிவில் அமைப்­பு­கள், பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரை உள்­ள­டக்­கிய அமைப்­பு­களே பொதுக்­கட்­ட­மைப்­பைப்­பற்றி பேச­வேண்­டும். ஈ.பி.டி.பி கட்­சி­யின் ஆத­ர­வில் இருக்­கின்ற யாழ். மாந­கர சபை முதல்­வர் எவ்­வாறு பொதுக் கட்­ட­மைப்­பைப் பற்றி பேச­லாம்?

தியாக தீபத்­தின் நினை­வேந்­தல் வழ­மை­யாக, அவர் உயிர்­நீத்த நேர­மான 10.48 க்கு அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. நேற்­றைய தினம் நினை­வேந்­தல் செய்­வ­தற்கு ஒழுங்­க­மைக்­கப்­பட்­டி­ருந்த இடத்­தில் ஈ.பி.டி.பி. கட்­சி­யின் ஆத­ர­வில் உள்ள மணி­வண்­ணன் தரப்­பினை சேர்ந்த ஜெய­பா­லன் என்­ப­வர் முண்­டி­ய­டித்­துக் கொண்டு நல்­லூ­ரிலே 10.47 மணிக்கு தீபம் ஏற்றி இருக்­கி­றார். அதன் பின்­னர் புதிய நேரத்­தில் பாரம்­ப­ரிய நினை­வேந்­தல் குழு­வி­னர் சரி­யாக 10.48 மணி­ய­ள­வில் நினை­வேந்­தலை முன்­னெ­டுத்­த­னர். இங்கே நினை­வேந்­தலை குழப்­பி­யது யார்?
10.46 க்கு ஒரு காவடி வரு­கின்­றது. அந்­தக் காவ­டி­யா­னது மக்­களை ஊட­றுத்­துக் கொண்டு சென்று பொதுச்­சு­ட­ரை­யும் தாண்­டிச் சென்று தாங்­கள் முதலே நினை­வேந்­தல் சுடர் ஏற்ற வேண்­டும் என முண்­டி­ய­டிக்­கின்­றது. அங்­கே­தான் நேற்­றைய குழப்­பத்­துக்­கான அடிக்­கல் நடப்­பட்­டது.

அந்த காவ­டியை வழி­ந­டத்தி வந்­த­வர்­கள் யார் என்­றால் வேலன் சுவா­மி­க­ளும், அடி­யாள்­களை வைத்து இயங்­கு­கின்ற முதல்­வர் மணி­வண்­ணன் தரப்­பி­ன­ரும், ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்­சி­யி­ன­ரும்­தான்.

ஜன­நா­யக போரா­ளி­க­ளது வட்­ஸப் குழு­மத்­தில், ‘கஜேந்­தி­ரன் எப்­ப­டி­யும் நாளைக்கு ஆள்­களை கொண்­டு­வந்து விடு­வான், நாங்­கள் எப்­ப­டி­யா­வது எங்­கட ஆள்­களை செற்­பண்ணி அவை­யிட்ட இருந்து மைக்க அடிச்­சென்­றா­லும் பறிக்­க­வே­ணும், போரா­ளி­க­ளுக்கு களங்­கம் வந்­தா­லும் அது ஆறு மாசத்­துக்­குள் போய்­வி­டும். ஒருத்­த­ரும் அதைப்­பற்றி யோசிக்க தேவை­யில்லை. மணி நீங்­கள் அந்த காவ­டிக்கு இரண்டு பேரை செட் பண்­ணுங்கோ’ என கடந்த 25ஆம் கதைக்­கப்­பட்­டது. (அதற்­கான ஒலி நறுக்­கு­க­ளும் சுகா­ஷால் வழங்­கப்­பட்­டன) – என்­றார். (அ­ஸ்ரீம-26)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *