முடிந்தால் என்மீது வழக்குத் தொடுங்கள்! எரிசக்தி அமைச்சருக்கு ரத்நாயக்க சவால்!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தொலைக்காட்சி உரையாடலில் தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் என மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.

குறித்த தொலைக்காட்சி உரையாடலில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் தரக்குறைவான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாகவும் குறித்த கச்சா எண்ணெயைப் பயன்படுத்த முடியாது எனவும் ஜனக ரத்நாயக்க வெளிப்படுத்தினார்.

ஜனக ரத்நாயக்கவின் குற்றச்சாட்டு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க,

தனது கருத்துக்கு எதிராக அமைச்சரோ அல்லது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பான அதிகாரிகளோ நீதிமன்றத்திற்கு செல்வதற்காக காத்திருப்பதாகவும் அப்போது பல உண்மைகள் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர் வெளிப்படுத்திய உண்மையை ஆராய்ந்து, தவறு இருந்தால், அதைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனக ரத்நாயக்க அறிவுறுத்துகிறார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *