
இளம் வயதில் எடை அதிகரித்தால் அது ஒரு தர்ம சங்கடமான நிலைமையாக இருக்கும். சில வேளை நீங்கள் அதிகம் சாப்பிடாதவராகவும் இருக்கலாம். அப்படியிருந்தும் உடற்பருமன் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை தெரிந்துகொள்ள, முதலில் உடற்பருமன் பற்றியும் அதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும்.
உடற் பருமன் இரண்டு விதமாக ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் எடை அதிகரித்துள்ளதை உணர்வீர்களாயின், உங்கள் உடல் நிறை மற்றும் அது எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பின்வரும் குறிப்புகள் மூலம் அறிந்துகொள்வோம்
உங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் சமநிறைவான உணவினைத் தெரிவு செய்யுங்கள்.
கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை அளவு கொண்ட உணவுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் அன்றாட உணவில் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகரியுங்கள்.
தொலைக்காட்சி அல்லது கணினியைப் பார்த்துக்கொண்டு உண்பதற்குப் பதிலாக குடும்பத்துடன் இருந்து உண்ணுங்கள்.
உங்களுக்கு வெகுமதியாக உணவுப் பொருட்கள் எதையும் கொடுக்காதீர்கள்.
எந்த வகையான சிற்றுண்டியையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் உண்ணாதீர்கள்.
நீங்கள் எடையைக் குறைக்க ஆர்வமுடையவராக இருந்தால், சிறந்த பலாபலன்களைப் பெற உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் உடல் செயற்பாடுகளை அதிகரித்தல்
தரப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி நிகழ்ச்சியொன்றில் இணைந்து செயற்பட முயற்சி செய்யுங்கள்
வாகனத்தில் பயணம் செய்வதைவிட சாத்தியமான பொழுதெல்லாம் நடந்து செல்லுங்கள்.
நீச்சல், சைக்கிளோட்டம் மற்றும் நடனம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.
இவ்வாறான ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் உங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம்.
[embedded content]