சுற்றுலா தினத்தினை முன்னிட்டு சாட்டி கடற்கரையில் தூய்மைப்படுத்தல் செயற்திட்டம்!

<!–

சுற்றுலா தினத்தினை முன்னிட்டு சாட்டி கடற்கரையில் தூய்மைப்படுத்தல் செயற்திட்டம்! – Athavan News

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம் எனும் தொனிப்பொருளில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் வேலனை சாட்டி சுற்றுலா கடற்கரையோர தூய்மைபடுத்தல் செயற்திட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது வடமாகாண சுற்றுலா வழிகாட்டிகள்,வடமாகாண சுற்றுலா வழிகாட்டி பயிலுனர்கள்,யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியில் விருந்தோம்பல் கற்கை மாணவர்கள்,யாழ்ப்பாணம் ரில்ககோ விடுதியினர்,ஞானம் எடியூகேசன் ரெஸ்ட்,நல்லூர் லயன்ஸ் கழகத்தினர் இணைந்து குறித்த தூய்மை பணியினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *