ஜனாதிபதியின் அவநம்பிக்கையான முயற்சி: மீனாட்சி கங்குலி கடும் கண்டனம்

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இந்த கடுமையான கட்டுப்பாடுகள், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்து தெரிவிக்கும் உரிமையை முடக்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சட்டங்கள் நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைப்பதையும் உறுதிப்படுத்துகிறது  என அதன் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுமக்களின் எதிர்ப்பைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய ஒழுங்குமுறை ஜனாதிபதியின் அவநம்பிக்கையான முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக் போராடும் ஒரு நாடு மக்களின் குரல்களைக் கேட்க வேண்டுமே தவிர அவர்களை சிறையில் தள்ளக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஐ.சி.சி.ஆர்.பி.யின் கீழ் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் இலங்கைக்கு கடமைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உரிமைகள் தொடர்பில், அரசாங்கத்தின் தொடர்ச்சியான மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் கீழ் துரிதப்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் என்பவற்றை தடுப்பதற்கு, வலுவான தீர்மானம் அவசியம் என்றும் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  உறுப்பு நாடுகள், இலங்கை மக்களின், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிறைவேற்றுவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *