
சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகள் ஆகியவை தொடர்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வழங்கப்பட்டுவரும் ‘பசுமை அமைதி’ விருதுகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் ஆண்டுதோறும் மாணவர்களுக்கும் சிறந்த சூழற்செயற்பாட்டாளர் ஒருவருக்கும் ‘பசுமை அமைதி விருதுகள்’ வழங்கப்படுகின்றன.
அதன்படி மாணவர்களிடையே இந்த ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுக்குரியவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு சூழல் பொது அறிவுப் பரீட்சை இணையவழியூடாக எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 7.30 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சையில் தரம் 9 முதல் 13 வரை பயிலும் மாணவர்கள் தோற்றலாம்.
இதற்கு www.tamilnationalgreen.org இணையத்தளத்தின் ஊடாக எதிர்வரும் 5ஆம் திகதி முன்பாகப் பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் முதல் 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பசுமை அமைதிச் சான்றிதழோடு சிறப்புப் பரிசில்களும் வழங்கப்படும்.
அத்துடன் இந்த ஆண்டுக்கான சிறந்த சூழற் செயற்பாட்டாளர் ஒருவரைப் பரிந்துரை செய்ய விரும்புபவர்கள் அவர் பற்றிய விலரங்களைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், இல. 109, அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது greentamils5@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவோ எதிர்வரும் ஒக்ரோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது