
சிறிலங்கா மக்களுக்கு 7 லட்சத்து 73 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர மருந்துப் பொருள்களை அமெரிக்கா ரேஸ் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைத் தூதரகத்தின் கோரிக்கைக்கு அமைய தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடையில் மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான விற்றமின்கள், நாள்பட்ட நோய்க்கான மருந்துகள், இன்ட்ராவாஸ்குலர் வடிகுழாய்கள், சிரிஞ்ச்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் அடங்குகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.