அமைச்சர் டக்ளஸ் மீதான அவதூறுக்கு மணிவண்ணன் அணி மன்னிப்புக் கோர வேண்டும்: முன்னாள் முதல்வர் அதிரடி

யாழ்ப்பாணம், செப். 28: ‘மணிவண்ணன் அணியின் சபை உறுப்பினர் பார்த்திபன் என்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேவையற்ற வகையில் தொடர்புபடுத்தி விமர்சித்திருந்தார். இதற்கு மன்னிப்புக் கோர வேண்டும். மாநகர சபை உறுப்பினர்களின் போலித்தனங்களுக்கு ஒத்துப்போக முடியாது. இல்லையெனில் மாற்று முடிவு பற்றி சிந்திக்கப்படும்’ என்று யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தருமான (ஈ.பி.டி.பி.) யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்

அவர் மேலும் கூறுகையில் “யாழ் மாநகர சபையின் ஆட்சியாளர்கள் மக்களது நலன்களை கருத்திற்கொள்ளாது தான்தோன்றித்தனமாகவும், சுயநலத்துடனும் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் மேற்கொள்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.சபை உறுப்பினர்களின் போலித்தனங்களுடனான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துப்போக முடியாது எனவே நிகழ்ந்த தவறுக்கு மன்னிப்பு கோரவேண்ணும் இல்லையெனில் மாற்று முடிவு குறித்து சிந்திக்க நேரிடும்” என்றார் அவர்.

மணிவண்ணன் அணியின் சபை உறுப்பினர் பார்த்திபன் என்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேவையற்ற வகையில் தொடர்பு படுத்தி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *