
டோக்கியோ, செப்28
ஜப்பானிய பேரரசர் நருஹிதோவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று முற்பகல் நடைபெற்றது.
டோக்கியோவில் உள்ள பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான இம்பீரியல் அரண்மனையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.