
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் விவசாய சம்மேளன பிரதிநிதிகளுடன் அகில இலங்கை விவசாய சம்மேளனத் தலைவர் நாமல் குணரட்ண, மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் இன்று புதன்கிழமை மாலை சந்திப்பில் ஈடுபட்டனர்.
இச்சந்திப்பு மூதூர் – வீரமாநகர் பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது விவசாய சங்க பிரதிநிதிகள் தாம் விவசாயம் செய்வதற்கு எதிர் நோக்கும் எரிபொருள் பிரச்சினை, குளங்கள் புனரமைக்கப்படாமை, விதை நெல்லுக்கான விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்வைத்தனர்.
.
இதனை கேட்டறிந்து கொண்ட இலங்கை விவசாய சம்மேளன தலைவர் நாமல் குணரத்ன கருத்து தெரிவிக்கையில்:
விவசாயிகளின் பிரச்சினைகளை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.நீங்கள் கூறிய பிரச்சினைகளும் இதில் உள்ளடங்கும்.
விவசாயிகள் பசளை பிரச்சினை, குளங்கள் புனரமைக்கப்படாமை, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் தற்போதைய அரசாங்கம் புதிய அமைச்சர்களை நியமிக்கின்றது.அதேபோன்று நாட்டு மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது ஜனாதிபதி வெளிநாடுகளில் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்.
எமது நாட்டு அரசியலில் லஞ்சம், மோசடி,ஊழல் நிறைந்து காணப்படுகின்றது.இதனை முழுமையாக ஒரே நேரத்தில் இல்லாமல் செய்ய முடியாது படிப்படியாகத்தான் இல்லாமல் செய்ய முடியும்.இதற்காக பொதுமக்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் நேர்மையானவர்களுக்கு ஆதரவுகளை வழங்க வேண்டும்.அப்போதுதான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்