அமைச்சர் கெஹலிய மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை (28) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு குற்றப்பத்திரிகைகளை வழங்கியிருந்தது.
அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சர் உள்ளிட்ட சந்தேக நபர்களை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
இந்த வழக்கு 2022 நவம்பர் 3 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
பிற செய்திகள்