
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாடாளுமன்ற தேசிய பேரவையில் இணைந்துக்கொள்ளாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பிரேரணையின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட, அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தேசிய சபைக்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் செப்டெம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் நாளை (29) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்