
மனித-யானை மோதல் காரணமாக கடந்த 48 மணித்தியாலங்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
பொருளாதாரத்தில் நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கையின் கிராமப்புறங்களில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது
பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக காட்டு யானைகளின் வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டன.
இதனையடுத்து கிராமங்களுக்குள் புகுந்த யானைகள் மனிதனின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருவதுடன், உயிர் இழப்பையும் ஏற்படுத்துகின்றன.
யானைகளின் அத்துமீறல்களின் போது இலங்கையின் கிராமப்புறங்களில் கடந்த இரண்டு நாட்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கெபித்திகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள ஏரியில் நீராடச் சென்று திரும்பிய 56 வயதுடையவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
கெபிதிகொல்லாவஇ உடகாவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்கிழமையும் இதே போன்ற இரண்டு இறப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பிற செய்திகள்