
மன்னார் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சர்வோதய நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களும் மன்னார் சர்வோதயத்தில் இடம்பெறும் பல்வேறு ஊழல் செயற்பாடுகளை முன்னிறுத்தி பதவி விலகியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் செயற்பட்டுவரும் மிகப்பெரிய அரச சார்பற்ற நிறுவனமான சர்வோதயம் மன்னார் சர்வோதயத்தின் ஊடாக மாவட்ட ரீதியில் பல செயற்திட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை மன்னார் சர்வோதய மாவட்ட பணிப்பாளர் ஒழுங்கான முறையில் விடுவிப்பதில்லை.
அதே நேரம் தொண்டு நிறுவனங்களினால் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டும் வாழ்வாதார உதவிகளை கூட ஒழுங்காக வழங்குவதில்லை.
இது தொடர்பாக பணியாற்றும் ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்ற போது முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், அதே நேரம் பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், உத்தியோகத்தர்களுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகவும் தெரிவித்து அனைத்து ஊழியர்களும் பதவி விலகியுள்ளனர்.
தொடர்ந்து பிழைகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களை பழிவாங்குவங்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும், அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி விரிவான கடிதம் ஒன்றை சர்வோதய நிறுவனத்தின் தேசிய காரியாலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுடன், மாவட்ட காரியாலயத்தில் பதவி விலகள் கடிதங்களையும் கையளித்துள்ளனர்.
பிற செய்திகள்