பெற்றோல் விலை அதிகரிப்பு; பொது பயன்பாடுகள் ஆணைக்குழு எழுப்பியுள்ள கேள்வி!

சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல், டீசலின் விலை நிர்ணயிக்கப்படுகின்ற விதத்தை அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவர் பதிவேற்றம் செய்துள்ள ஆவணத்திற்கு அமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல், ஒக்டேன் 92 ரக பெற்றோலை விடவும் குறைந்த விலைக்கே கொள்வனவு செய்யப்படுகிறது.

உலகில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, ஒக்டேன் 95 மற்றும் 92 ஆகியவற்றின் விலைகளுக்கு இடையே பாரிய வேறுபாடு இல்லை.

உலகில் எண்ணெய் விலையை தீர்மானிக்கும் சந்தை பெறுமதிகள் உள்ளன.

அமைச்சர் கூறும் வகையில், PLATTS என்ற சந்தையின் விலைகளுக்கு அமையவே பெற்றோலும் டீசலும் கொள்வனவு செய்யப்படுகின்றது. PLATTS சந்தையில் ஒரு பீப்பாய் ஒக்டேன் 95 ரக பெற்றோலை 100 .75 டொலருக்கு கொள்வனவு இலங்கை கொள்வனவு செய்கின்றது.

ஒரு லிற்றர் ஒக்டேன் 95 ரக பெற்றோல் துறைமுகத்தில் 243 ரூபா 88 சதத்திற்கே இறக்கப்படுகிறது. ஒரு லிற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோரோல் துறைமுகத்தில் இறக்கப்படுகின்றபோது, அதன் விலை 284 . 92 சதமாக உள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 விட 95-ஐ துறைமுகத்தில் இறக்குவதில் 41.04 சதம் இலாபம் கிடைக்கின்றது.

அமைச்சரின் டுவிட்டர் பதவிற்கு அமைய, ஒரு பீப்பாய் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 120 டொலருக்கு இறக்குமதி செய்யப்படுவதுடன், 95 ரக பெற்றோல் 105 டொலருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.

அண்ணளவாக நாம் சிறந்த முறையில் சுத்திகரிக்கப்பட்ட ஒக்டேன் 95 ரகத்தை விட சுமார் 20 டொலரை ஒரு பீப்பாய் 92 ரக பெற்றோலுக்கு செலுத்துகிறோம்.

92 ரக பெற்றோலுக்கு நாம் 3.8 டொலர் பிரீமியம் செலுத்துகிறோம். 92 -ஐ கொண்டு வருவதை விட 95 – ஐ கொண்டுவருவதால் 20 டொலர் இலாபம் கிடைக்கின்றமை இது குறித்து ஆராய்வோருக்கு தெரியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *