
“தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளது.”
– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய பிரச்சினைககள் தொடர ஒருபோதும் இடமளிக்க முடியாது. குறுகிய காலத்துக்குள் இந்தப் பிரச்சினைகளுக்குள் உரிய தீர்வுகளைக் காண வேண்டும்.
தேசிய பிரச்சினைகள் நீடித்தால் இன, மத நல்லிணக்கம் ஏற்படாது.
நாட்டில் ஏதோவொரு வகையில் இன ரீதியிலும், மத ரீதியிலும் கருத்து மோதல்கள் உருவாகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்திக் குளிர்காய சிலர் முற்படுகின்றனர்.
எனவே, தீர்வு விடயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசு விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளது” – என்றார்.
பிற செய்திகள்