எண்ணெய் கொள்வனவில் பாரிய ஊழல் மோசடி! முறைப்பாடு தாக்கல் செய்ய நடவடிக்கை

எண்ணெய் கொள்வனவு தொடர்பில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடுகளை தாக்கல் செய்யவுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்,

ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்படும் ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 90 முதல் 95 டொலர்கள் வழங்கப்படுகிறது.

எனினும் 68 டொலர்களுக்கு பீப்பாய் ஒன்றை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மசகு எண்ணெய் இறக்குமதிக்காக 190 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

இதில் இருந்து 80 மெட்ரிக் தொன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்துள்ளது.

எனினும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தால், மசகு எண்ணெய்க்காக செலவிடப்பட்ட பணத்தைக் கொண்டு 200,000 மெட்ரிக் தொன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கேள்வி பத்திர நடைமுறைகளைப் பின்பற்றி எண்ணெய் இறக்கப்படுவதில்லை, என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர், அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *