யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் தாவடி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வீட்டினை சேதப்படுத்தியதோடு வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளை எரியூட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்