இனம் , மொழி , உரிமை என்று திரண்ட இளைஞர் கூட்டத்தை நயவஞ்சகமாக அழித்தது மட்டுமல்லாது . இனிவரும் எந்தக் காலப்பகுதியிலும் இவ்வாறு இன்னொரு இளைஞர் படை திரளவோ உருவாக்கப்படவோ கூடாது என்ற தந்திரச் சிந்தனையின் வெளிப்பாடே போதைப்பொருள் பாவனை என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் றாபின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
சமகால அரசியல் தந்திர காய்நகர்த்தல் களை உன்னிப்பாக உற்றுநோக்கினால் சில விடயங்கள் தெரியவரும் . வடக்கையும் கிழக்கையும் நில அமைப் புத் தொடுகையிலிருந்து பிளவுபடுத்தி , இருவேறு தேசங்களாக மாற்றியமைத்தல் , பாரம்பரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழித்தலும் அவ்விடங்களை பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தலும் , நினை வேந்தல்களை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் செயற்பாடுகளைத் தடுத்தல் இப்படியான நிகழ்ச்சி நிரலின் அடுத்த கட்டம்தான் போதைப்பொருள் பாவனையும் திணிப்பும் .மாணவர்களையும் இளைஞர்களை யும் போதைக்கு அடிமையாக வைத்திருந்தால் அவர்கள் , அதைத்தாண்டி தமது உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் தொடர்பில் சிந்திக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் இந்தப் போதைப்பொருள் வடக்கு – கிழக் கில் திணிக்கப்படுகின்றது .
போதைப் பொருள் வடக்கு – கிழக்குப் பகுதியூடா கக் கொண்டுவரப்படுவதும் அது இல குவில் கிடைக்கக்கூடிய வகையில் செய்யப்பட்டிருப்பதும் தெரியாத விடய மல்ல . கடமைக்காக மாதத்துக்கு ஒரு கைதுகள் மேற்கொள்ளப்படும் நாடக மும் நாம் அறியாத விடயமல்ல .
எமது இளைஞர்களும் , பெற்றோரும் விழித்துக்கொள்ள வேண்டிய தருண மிது . இதில் தேசநலன் விரும்பிகள் , மதத்தலைவர்கள் . பொது அமைப்புக் கள் போன்ற சமூக நலன் சார்ந்த அனைவருக்கும் மிகப்பெரிய பொறுப் பும் மீறமுடியாத கடமையும் உள்ளது .
போதைப்பொருள் ஒழிப்புக்காக நாம் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கக் கடமைப்பட்டுள்ளோம் . அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை யாழ் . பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய சமூகமாகிய நாம் முன்னெடுத்துள்ளோம் என்றார்.
பிற செய்திகள்
.