முதியோருக்கான கொடுப்பனவில் சிக்கல்

கொழும்பு, செப்.29

அரசாங்கத்தால் முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 

குறைந்த வருமானத்தை பெறும் 70 வயதை கடந்தவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இக்கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  எனினும் இந்த மாதத்துக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *