கொழும்பு – கஜீமா தோட்ட தீ பரவல் தொடர்பான இறுதி அறிக்கையை உடன் சமர்ப்பியுங்கள் – தினேஷ் குணவர்தன பணிப்புரை!

கொழும்பு – கஜீமா தோட்ட தீ பரவல் தொடர்பான இறுதி அறிக்கையை உடன் சமர்ப்பியுங்கள் – பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை!

கஜீமா தோட்டத்தில் கடந்த ஒன்றரை வருடங்களில் மூன்று தடவைகள் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதோடு அதன் முன்னர் இடம்பெற்ற தீப்பரவல்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தற்போது இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் இறுதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், கஜீமா தோட்ட தீ பரவல் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன் நேற்றைய தினம் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் தினேஷ் இதனை தெரிவித்தார்.

இக்குழு கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்து கொட, யாதாமினி, குணவர்தன, காமினி லொக்குகே, சரத் வீரசேகர, மதுர விதானகே, இரான் விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன மேலும் கூறுகையில்,

கஜீமா தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் இறுதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தோட்டத்தில் வீடுகளில் கடந்த ஒன்றரை வருடங்களில் மூன்று தடவைகள் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. மேலும் அதன் முன்னர் இடம்பெற்ற தீப்பரவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளும் இதன் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இந்த தோட்டத்தை நிரந்தர குடியேற்றங்களுக்கு முன் தங்குவதை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது தொடர்பில் ஆராயுங்கள்.

ஏற்கனவே தற்போது இவ்விடயத்தில் பல சட்டவிரோத குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து தெரிவிக்கையில்,

மேலும் இந்த தீ மற்றும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடியேற்றங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய கொழும்பு மாவட்ட செயலாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்படும்.

மேலும் தீயினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு தற்காலிக தங்குமிடங்கள், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நிவாரணங்கள் என்பன கொழும்பு மாவட்ட செயலகத்தின் ஊடாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *