
பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை சிங்கள பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இன்று காலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது. பாடசாலையின் தேவை ஒன்றிற்காக பணம் கேட்டு எனத கொண்டு வராத தன் காரணத்தால் மாணவன் தாக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை திம்புல பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கொட்டக்கலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.
பிற செய்திகள்