
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க ஆகியோருக்கும் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கும் இடையிலான சந்திப்பு 28 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்புக்கள் வெவ்வேறாக இடம்பெற்றன.
மேலும், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மற்றும் பதில் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளமைக்கு கடற்படை, விமானப்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியயோர் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோணுக்கு தமது வாழ்த்தினையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இச் சந்திப்பினை நினைவுகூரும் வகையில் பதில் பாதுகாப்பு அமைச்சருக்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நினைவுச் சின்னங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்