வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகள் வெற்றியளிக்காவிட்டால் விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும் என விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கன்னொறுவ விவசாய உற்பத்தி நிலையத்தை நேற்று அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
வன விலங்குகளிடமிருந்து பயிர் சேதங்களைக் குறைப்பதற்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்க விவசாய அமைச்சு மற்றும் வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, விவசாய அமைச்சர் உரம் வழங்குவது போன்று நெல் உரிய முறையில் கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாயிகள் மேலும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிற செய்திகள்