
குருணாகல், செப்.29
தென் கொரியா மற்றும் ஜப்பானில் தொழில் வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குருநாகலில் உள்ள முக்கிய இடமொன்றில் இளைஞர்களை ஒன்று திரட்டி தென்கொரியா மற்றும் ஜப்பானில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் வசூலித்துள்ளனர்.
இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குருநாகலில் உள்ள இடத்தை சோதனை செய்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.