முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதன்முறையாக வாய், முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலிருந்து குறித்த அறுவை சிகிச்சைகளுக்காக நோயாளர்கள் வெளிமாவட்டங்களான யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வாய், முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 27ஆம் திகதி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அகிலன் தலைமையிலான குழுவினரால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு 6 மணிநேர முயற்சியில் வெற்றிகரமாக தாடை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.