
தமிழகத்திலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டது என்று சந்தேகிக்கப்படும் 160 கிலோ கேரளக் கஞ்சா மன்னாரில் நேற்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டது.
தலைமன்னார் பகுதியில் பட்டா ரக வாகனத்தில் கடத்திச் செல்வதாக தலைமன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கஞ்சா மீட்கப்பட்டது.
அத்துடன் கஞ்சாவைக் கடத்திய குற்றச்சாட்டில் பட்டா ரக வாகன சாரதியும் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட கஞ்சாவையும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான வாகன சாரதியையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.