தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரிய மனுவை விசாரணை செய்யவேண்டும் என்று கோரி, வாடகை வாகன சாரதி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மலேசிய பிராந்திய நீதிமன்றம் ஒன்று, இன்று தள்ளுப்படி செய்தது.
விவாதங்களை அடுத்து பொதுநலன் தொடர்பான விடயம் என்ற அடிப்படையில் மூன்று நீதிபதிகளை கொண்ட நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மனு தொடர்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், நீதிமன்றத்தின் சட்ட வரம்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று நீதிபதிகள் தமது நிராகரிப்புக்கு காரணம் காட்டினர்.
முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளை, பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்குவதற்கான மனுவினை மீள்பரிசீலனைக்காக, 2020 ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதியன்று மனுத்தாரர் பாலமுருகன், நீதிமன்ற ஆணையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்