
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்த வயோதிப தாயின் பணம் வீதியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 14,500 ரூபா பணம் அவரிடம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தெல்துவ சமுர்த்தி வங்கியில் இருந்து உரிய பணத்தை எடுத்துக்கொண்டு வீதியில் சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணிடம் சந்தேகநபர் இவ்வாறு கொள்ளையடித்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
“அம்மாவின் அடையாள அட்டை சரியாக இருக்கிறதா என்று சமுர்த்தி மிஸ் பார்க்கச் சொன்னார்” என்று கொள்ளையர் கூறியுள்ளார்.
வயோதிபப் பெண் அடையாள அட்டையைக் காட்டியவுடன், அவர் வைத்திருந்த 14,500 ரூபா பணத்தைத் பறித்துக்கொண்டு கொள்ளையன் தப்பிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்