
கம்பஹா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள்; மற்றும் ஊழியர்களின் அலட்சியப் போக்கினால், செயலிழந்துப்போன சிறுமிக்கு 3 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அங்கவீனமடைந்த குறித்த சிறுமியின் தாயார் கம்பஹா மாவட்ட மருத்துவமனை மற்றும் சுகாதார அமைச்சுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அதாவது, கர்ப்ப காலத்தில் மருத்துவ அலட்சியமே, தனது மகளுக்கு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தியதாக அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், மருத்துவ அலட்சிய குற்றத்துக்காக 3 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
பிற செய்திகள்