இலங்கையுடனான ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்- இந்திய உயர்ஸ்தானிகர் உறுதி!

இலங்கையுடனான ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்! உயர்ஸ்தானிகர் கல்வி மற்றும் திறன் பயிற்சிகளில் இந்தியாவும் இலங்கையும் ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் சுமார் 700 புலமைப்பரிசில்கள் தவிர, இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில் கூட்டாண்மை மூலம் உயர்கல்வி உட்பட கல்வித் துறையில் இலங்கைக்கு உதவுவதற்கான முயற்சியை இதன்போது உயர்ஸ்தானிகர் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *