காட்டு யானைகளின் தொல்லையினால் பயன் தரும் மரங்களுக்கு சேதம்-மக்கள் கவலை!

வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மயிலாஙகுளம் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது பெரும்போக அறுவடை முடிவடைந்துள்ளமையினால் காட்டு யானைகள் உணவு தேடி ஊர்மனைக்குள் உற்புகுந்து பயந்தரும் தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

குறித்த, யானைகள் தப்போவ சரணாலயத்திலிருந்து ஊர்மனைக்குள் உற்புகுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு வேலைகளில் மிகவும் அச்சத்திற்கு மத்தியில் வெளியில் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கினரனர்.

ஊர்மக்களின் பணத்தில் யானை வேலிகள் அமைத்தும்  யானைப் பள்ளம் தோண்டியும் எவ்வித பயணுமில்லையென அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்டுவதகான நடவடிக்கைகளை மிகவிரைவில் முன்னெடுக்குமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *