மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, மக்களை அடக்கி, அமைச்சர்களுக்கு ஆறுதல் கூறுவதே அரசாங்கத்தின் நடவடிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கொழும்பில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களை மகிழ்விப்பதற்காக மக்களை அழுத்தங்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
கொலோம மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“ரணில் ராஜபக்ச அரசின் அடக்குமுறை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் எதிர்ப்பைத் தடுப்பதற்கும் அடக்குவதற்கும் அரசாங்கம் செய்த சமீபத்திய காரியம், கொழும்பு மாவட்டத்தின் ஒரு பெரும் பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் பிரசுரிப்பதுதான். இது சட்டவிரோதமான மற்றும் ஜனநாயக விரோத செயல் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு செயற்பட ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. ஏனெனில் மக்களின் கருத்துக்களை தெரிவிப்பது அடிப்படை உரிமை. இந்த முடிவுக்கு எதிராக நிற்கிறோம்.அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
பிற செய்திகள்