
கொழும்பு, செப். 30: அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் “அரசாங்கத்திடம் பணம் இல்லாதததால் அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளமே வழங்கப்படும் என நிதியமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்றார் அவர்.