நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

கொழும்பு, செப்.30

நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்றைய தினம் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமுர்த்தி, முதியோர், விசேட தேவையுடையவர்கள், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு, பொது மக்கள் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்கள், காத்திருப்பு பட்டியலில் உள்ள விண்ணப்பதாரிகள் உள்ளிட்ட அனைவரும் குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யவேண்டியது அவசியமாகும்.

தகுதியானவர்கள் தமது பிரதேச செயலகத்திற்கு தமது விண்ணப்த்தை கையளிக்குமாறு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை வகுப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், 011 2 151 481 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கோ அல்லது 1919 துரித அழைப்பு இலக்கத்திற்கோ அழைப்பை ஏற்படுத்தி குறித்த விடயம் தொடர்பான தகவல்களை பெற்று பெற்றறுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *