பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உயிரிழப்பு

கம்பஹா பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா அகரவிட பிரதேசத்தில் பெண்ணொருவரின் கைப்பையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அப்போது, ​​குறித்த பெண்ணின் அலறலை அடுத்து அந்த இடத்திற்கு வந்த அவரது தந்தை மகன் தம்பதியரையும் சந்தேக நபர் தாக்கியுள்ளார்.

குறித்த மகன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், அவரது தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சென்ற பொலிஸாரை குறித்த சந்தேக நபர் தடியால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, ​​பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஹல்கம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *