பூநகரி, செப். 30: பூநகரி கெளதாரிமுனை கிராமத்தில் ‘சிலோன் சீபூட் பார்ம்’ தனியார் நிறுவனத்தின் முதலீட்டில் ரூ. ஐம்பது மில்லியனில் அமையவுள்ள நவீன இறால் பண்ணை திட்டத்தை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை தொடக்கி வைத்தார்.

பதின்நான்கு ஏக்கரில் ஆரம்பிக்கப்படவுள்ள இப் பண்ணையின் ஊடாக ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடி வேலை வாய்ப்பை பெறவுள்ளனர்.