மாலைத்தீவிலிருந்து 17 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

கொழும்பு, செப்.30

குடியேறிகள் சுகாதார கொள்கையை தயாரிப்பதற்கான அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாலைத்தீவு தூதுக்குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா மக்கீர் உள்ளிட்ட 17 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு நாட்டில் குடியேறிகள் சுகாதார கொள்கை தயாரிக்கப்பட்டது.

அதனை ஆராய்ந்து அந்த நாட்டில் குடியேறிகள் சுகாதார கொள்கையை தயாரிப்பதற்கான அனுபவத்தை பெற்றுக் கொள்வதே அந்த தூதுக்குழுவின் நோக்கமாகும்.

சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குறித்த தூதுக்குழுவினருக்கும் இடையிலான விஷேட செயலமர்வு கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுகாதாரத்துறையில் காணப்படும் முன்னேற்றம், ஒத்துழைப்பு, அனுபவம் என்பன தொடர்பில் கருத்து பரிமாறப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *