பாடசாலையில் உயிரிழந்த மாணவி

புத்தளம், ஓக.11

புத்தளம் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காலைநேர வழிபாட்டிற்குரிய மணி ஒலித்ததும் மாணவி வகுப்பறையில் இருந்து மைதானம் நோக்கி ஓடியுள்ளார்.

இதன்போது தரையில் வீழ்ந்த மாணவி மயக்கமுற்ற நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *