
முல்லைத்தீவு பகுதியில் காணி ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிருஷ்ணர் கோவிலுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ் மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை இன்று (12) முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைபாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.