வரிக் கட்டமைப்பில் மாற்றங்கள்: வெளியானது வர்த்தமானி

உத்தேச உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, வரிக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது மாதாந்தம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ள தனிநபர் வருமான வரி எல்லையை, ஒரு இலட்சம் ரூபாய் வரையில் குறைப்பதற்கு இதனூடாக முன்மொழியப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக ஜனாதிபதியால் அண்மையில் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு அமைய, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *