18 வயது இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட 55 வயது நபர்

காதலுக்கு கண் இல்லை என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள்.ஆனால் காதலுக்கு வயதும் இல்லை என்று சொல்லக் கூடிய பல்வேறு சம்பவங்கள் பதிவாகி வருகிறது.

பாகிஸ்தானில் 55 வயதுடைய பாறூக் என்ற நபர் (திருமணமாகாதவர்).18 வயதுடைய முஸ்மா என்ற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.குறித்த பெண் ஒரு பாடகராக உள்ளார்.சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண்ணின் பாடல்களை ரசித்த பாரூக் குறித்த பெண்ணை தேடிக் கண்டிபிடித்து நேரில் சென்று வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த பெண் பாடல் ஒன்றின் மூலம் தனது காதலை தெரிவித்துள்ளார்.இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.இரண்டு பக்கத்திலும் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.என்றாலும் அவர்கள் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *