பூநகரி பிரதேச சபையின் முன்மாதிரியான செயற்பாடு!

பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளின் நன்மை கருதி பூநகரி பிரதேச சபை எடுத்துள்ள முன்மாதிரியான செயற்பாட்டு பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

தற்போது கால போக நெற்செய்கை மற்றும் மேட்டு நிலப் பயிற் செய்கை என்பன ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் பயிற்செய்கைக்கு தேவையான நிலத்தினை உழுவதற்கு பூநகரி பிரதேச சபை தனது உழவு இயந்திரத்திரத்தை குறைந்த கூலியில் வேவையில் அமர்த்தியுள்ளது.

அதனடிப்படையில், ஒரு உழவுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3000 ரூபாயும், இரண்டு உழவுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5500 ரூபாயும் பூநகரி பிரதேச சபையால் அறவிடப்பட்டு விவசாயிகளுக்கான வயல் நிலங்கள் உழப்பட்டு வருகின்றன.

இதனை அடிப்படையதக கொண்டு பூநகரியில் தனியாரும் 5500 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரையே மக்களிடம் உழவிற்கான கூலியாக அறவிட்டு வருகின்றனர். இதனை விவசாயிகள் பலரும் வரவேற்றுள்ளனர்.  

ஆனால், வவுனியா போன்ற மாவட்டங்களில் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை உழவுக்கான கூலி அறவிடப்படுவதாக தெரிவித்த விவசாயிகள், வவுனியாவில் உள்ள உள்ளுராட்சி மன்றகள், கமநல அபிவிருத்தி திணைக்களங்கள் என்பவற்றிடம் உழவு இயந்திரங்கள் இருந்தும் விவசாய மாவட்டமான வவுனியா விவசாயிகளின் நன்மை கருதி இவ்வாறான ஒரு செயற்பாட்டை முன்னெடுக்கவில்லை எனவும், இதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தனியார் அதிகளில் விவசாயிகளிடம் உழவுக்கான பணத்தை அறவிடவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *