பல்கலைக்கழக கிரிக்கெட் லீக் – துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பணியாளர்களிடையே புரிந்துணர்வையும், நட்புறவையும் நிலைபெறச் செய்யும் நோக்க்குடன் நடாத்தப்படவுள்ள யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் – துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு நேற்று (12) புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் உரிமையாளர்கள், முகாமையாளர்கள், அணித் தலைவர்கள், வீரர்களின் முன்னிலையில் பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் கூடியிருக்க துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா வெற்றிக் கிண்ணத்தைத் அறிமுகம் செய்தார். 

இந்தச் சுற்றுப் போட்டியில் 6 அணிகள் பங்குபற்றவுள்ளன. போட்டியின் அறிமுக ஆட்டத்துடன் முதற்சுற்று போட்டிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக ஆடுகளத்தில் ஆரம்பமாகவுள்ளன. சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *