“எக்ஸ்பிரஸ் பேர்ல்” கப்பல்: இழப்பீட்டு பேச்சுவார்த்தை வெற்றி- சாகல கருத்து!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக் காரணமாக நாட்டின் கடல் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு,நாட்டுக்கு கிடைக்க வேண்டிய காப்புறுதி இழப்பீடு தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நடைபெற்றதாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்தது.

ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், கப்பலுக்குச் சொந்தமான நிறுவனத்தின் பிரதிநிதிகள், காப்புறுதிப் பிரதிநிதிகள் உட்பட பொறுப்பான தரப்பினர் பலர் வருகை தந்ததாகவும், அவர்கள் அனைவரும் சாதகமான பதிலை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

கடற்படை வரலாற்றில் இது ஒரு தனித்துவமான விபத்து எனவும், பிளாஸ்டிக் கழிவுகள், அபாயகரமான இரசாயனக் கழிவுகள், எண்ணெய் மற்றும் இலத்திரனியல் கழிவுகள் கடலில் கலந்து பெருங்கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

கப்பல் விபத்துடன் தொடர்புடைய கப்டன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை கையளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றாடல் சேதங்கள் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதற்கமைவாக சுற்றாடல் அதிகாரசபை நிபுணர் குழுவொன்றை நியமித்து அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு செய்து உரியவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *