சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 25 கிலோகிராம் எடையுள்ள கோதுமை மா பொதி ஒன்றின் விலை 7 ஆயிரத்து 250 ரூபாவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா இறக்குமதி காரணமாக விலை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.