தமிழில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நடந்து வரும் நிலையில், தினமும் பல பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
பரபரப்புக்கு பஞ்சமில்லாததால், கடந்த சீசன்களைப் போலவே பிக்பாஸ் நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிக் பாஸ் அல்டிமேட்டைப் போலவே, பிக் பாஸ் சீசன் 6 டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்கள் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு குழுவின் தலைவியான ஜனனி எல்லோர் முன்னிலையிலும் வந்து எங்கள் டீமை மாயமானவர் யார் என்று தெரியவில்லை என்று சொன்னதும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதன் பிறகு ஜனனி, தனலட்சுமியிடம் ஒரு போட்டியாளரை மாற்றிக் கொள்ளச் சொல்கிறார்.