கொத்து ரொட்டியின் விலை குறைப்பு! – வெளியான மகிழ்ச்சித் தகவல்

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற்கொண்டு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கொத்து ரொட்டியின் விலையை குறைத்துள்ளது.

அதன்படி, நாளை முதல் கொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மா அடிப்படையிலான ஏனைய பொருட்களின் விலை குறைக்கப்படமாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது கொத்து ரொட்டி விலையானது ரூபா 500 முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *